Thursday, August 16, 2012

நினைவுகள் !!



                                               உன் பிரிவை விட கொடுமையானது 
                                                      துயரங்களை தூண்டிவிடும் 
                                                            உன் நினைவுகள் !!

சில நேரம் !! சில சோகம் !!

கையில் நிறைவாய் கடலை இருந்தும் ,
மனம் வருந்தும் !!!
தவறி விழுந்த ஒற்றை கடலையை நினைத்து !!





இன்று நானும் அதே போல்தான் !!

வாழ்க்கை முழுவதும் வசந்தம் இருந்தும் 
மனம் வருந்துகின்றது !!
சில நேரம் கொண்ட சின்ன சோகம் கண்டு !!

Thursday, July 14, 2011

மறந்துவிட்டேன் !!!


அடிக்கடி அனைத்தையும் மறந்துவிடும்
நான் , ஏனோ உன்னை
மறக்க மட்டும் மறந்துவிட்டேன் !!!

Wednesday, November 24, 2010

அன்று ,,
நானும் காதல் செய்தேன்
நீயும் காதல் செய்தாய் ....



இன்று ,,

நாம் வாழ்கிறோம் ...
நீ உன் கணவனோடு ,



நான் உன் நினைவோடு !!












என் கவிதைகளை நேசித்த நீ ,
காதலை மட்டும் யோசிப்பது ஏனோ !!!

என்

கவிதைகள்தான் கற்பனையானது !!!!
காதல் நிஜமானது !!

காத்திருப்பு !!


நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்
அதிகம்